Monday 25 April 2011

Kuruba or Kurumba: Who are they?

Traditionally warriors and farmers, Kurumba were late to take up modern education, but have made rapid progress in many fields. They are today developing into a vibrant and dynamic community coming out of the inferiority complex imposed on them since the fall of Vijayanagara Empire. The community is ably led by many politicians and social thinkers who are today not only leading the kuruba community but also all deprived sections of the society. Kurubas today have become the voice of all the deprived communities of the society grouped under Upper Backward Class. More work has to be done to help the vast majority of Kuruba Gowdas living in the villages to come out of the inferiority complex and make a life for themselves.

Saturday 2 April 2011

அன்புடையீர்  வணக்கம். கனகதாசர் மகா சபை மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாம் யார்? நம் குரும்பா சமுதாயம் எத்தனை வரலாற்று சிறப்பு மிக்கது? நம் முன்னோர்கள் எத்தகைய சிறப்புமிக்கவர்கள்? இவ்வாறு பல கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியாமல், நமது சமுதாயத்தின் முகவரியை தொலைத்து, நம் மதிப்பும், மரியாதையும், கௌரவமும் மறைக்கப்பட்டு, நமக்கே நம்மை தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், நம் சந்ததியினரும் நம் குலபெருமையும், நம் நீண்டகால வரலாற்று சிறப்புமிக்க நம் குரும்பா சமுதாயத்தை அடையாளம் காண முடியாமல், ஒதுக்கப்பட்டு, சிதைந்துபோகும்  காலம் தூரம் இல்லை. "குரு" என்றால் அறிவு வழிகாட்டி அல்லது அறிவு வெளிச்சம் என்றும், "பா" என்றால் உலகம் என்றும், ஆக குருபா என்றால் உலகத்திற்கு அறிவு வெளிச்சத்தை கொடுப்பவர்கள், ராஜ தந்திரங்களை கையாள்பவர்கள், மந்திரி பதவிகளை வகிப்பவர்கள் என்று பொருள்படும். நம் சமுதாயம் ஆடு, மாடு (பண்டங்கள்) மேய்க்கும் பணியை மட்டுமே செய்து வந்திருக்கிறோம், வேறு எந்த தொழிலுக்கும் உகந்தவர்கள் அல்ல என்று தவறாக புனையப்பட்டிருப்பதை அறிந்து நாம் நம் மனதோடு நொந்து  போயிருந்தாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை.  உண்மையை உணர்ந்துக்கொள்ள சற்றே வரலாற்றை புரட்டி பார்ப்போம். குருபா சமுதாயம் ஒரு தொன்மை வாய்ந்த, வீரம் செறிந்த, ஆன்மிகம் செழித்த ஒரு பழமை வாய்ந்த பெருமைமிகு இனமாகும். மகாபாரதம் காலம் தொட்டு இன்று வரை, கலாசாரம், பண்பாடு, கலை, இலக்கியம், அன்பு, குடும்ப அமைப்பு போன்ற அனைத்து துறைகளிலும் குலப்பெருமையை எந்த ஒரு தெளிவான அடிப்படையும் இன்றி, இன்றுவரை பின்பற்றி வருகிறோம் என்றால், நம் ரத்தத்தில் கூட நம் வீரமும் பண்பாடும் கலந்திருப்பதை உணர முடிகிறது.  கேரளா மண்ணை ஆண்ட பழசி ராஜாவின் முக்கிய thalapathiyaana thalakkal chandu,  karnaataka பெல்காம் சித்தூர் சென்னம்மாவின் வீர தளபதியும் சுதந்திர போரட்ட வீரருமான  சங்கொலி ராயனா,  குரு ஸ்ரீ வித்யரண்யரின்   சீடர்களும்,  தென்னிந்தியாவின் எழுச்சிமிகு விஜயநகரப் பேரரசை தோற்றுவித்தவர்களுமான ஹரிஹரர் மற்றும் புக்கரர், ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய சத்ரபதி சிவாஜியின் தாய் ஸ்ரீமதி ஜீஜாபாய், உலகப்புகழ் பெற்ற சாகுந்தலம் இயற்றிய காளிதாசர், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண பகவானை தரிசிக்க, கடவுளையே தன்பக்கம் திருப்பிய, ஆன்மீக கீர்த்தனைகளாலும், பாஜனைகளாலும் நாராயணின் அனுக்கிரகம் பெற்ற ஸ்ரீ கனகதாசர்: இவ்வாறு வீரத்திற்கும், விவேகத்திற்கும், ஆன்மீகத்திற்கும் எத்தனையோ உதாரண புருஷர்களை கொண்ட நம் சமுதாயம் மிக்க பெருமைக்குரியது என்பதில் வியப்பேதும் இல்லை.  எந்த ஒரு சமுதாயத்திற்கும் இல்லாத பல சிறப்புகள் நமக்கே உரியது என்பதில் கர்வம் கொள்வோம். மாறாக, நம்மை நாம் தாழ்த்தி, நம் மதிப்பை வீழ்த்தி உலகத்தில் அடையாளம் இல்லாமல் மறைந்து கிடக்கும் நம் சமுதாயத்தை தட்டி எழுப்பவம், நம்மினதவரை ஒன்று சேர்க்கவும், தொழில், வணிகம், கல்வி, அரசியலில் நாம் முக்கிய பங்காற்றவும், நம் இளைய தலைமுரையினரையினருக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,  கனகதாசர் மகா சபை என்ற இந்த ஆன்மீக அமைப்பை உங்கள் ஆசியுடனும், ஆதரவுடனும் தொடங்கியிருக்கிறோம். இச்சபையின் இனிய தொடக்கம் எதிர்வரும் யுகாதி திருநாளன்று, நம் குலத்தின் ஆன்மீக நெறியை உலகிற்கு அடையாளம் காட்டிய ஸ்ரீ கனகதாசரை நம் அனைவரின் இல்லத்தில் குருவாக ஏற்று, அன்று மாலை திருவிளக்கேற்றி நம்மினத்தின் புகழோளியை உலகிற்கு காட்டுவோம்.